கொரோனா வைரஸ் பிரச்சனையையும் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்பும் சுயநலவாதிகள்!!

618

கொரோனா வைரஸ்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஒரு பக்கம் கொரோனா வைரஸைக் கண்டு உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்க, அதையும் பயன்படுத்தி சிலர் பிரபலமாக விரும்புகிறார்கள்.



குறைந்தது 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உ யிரிழந்தாயிற்று, 9 அவுஸ்திரேலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கொரோனா வைரஸ் ஹேஷ்டேக் 180,000 இடுகைகளுடன் பிரபலமடைந்து வருகிறது.

ஆனால், அதையும் பயன்படுத்தி பிரபலமடைய விரும்புகிறார்கள் சிலர். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் சிலர் முகமூடிகளுடன், தங்கள் கவர்ச்சியான உடலையும் உடையையும் காட்டி பிரபலமாக முயன்று வருவது வருத்தமளிப்பதாக உள்ளது.

அதில் ஒருவர் தனது காதலியை இடுப்பில் தூக்கி வைத்துக்கொள்ள, முகமூடிகளுடன் இருவரும் முத்தமிட்டுக்கொள்கிறார்கள். இதில், எங்களுக்கு கொரோனா வைரஸ் பயம் இல்லை என்ற கேப்ஷன் வேறு! மற்றொருவர் சுற்றிலும் முகமூடி அணிந்த அழகிய இளம் மொடல்களுடன் போஸ் கொடுக்கிறார்.

மற்றொருவர் தன் க வர்ச்சியைக் காட்டி, மாஸ்க் அணிந்துகொண்டே என் படங்களைப் பாருங்கள் என்கிறார். சமூக ஊடகங்களில் பிரபலமாவதற்காக எதைத்தான் பயன்படுத்துவது என்றே தெரியவில்லை இவர்களுக்கு.