பொலீசை மிரட்டிய பெண்ணுக்கு நேர்ந்தது என்ன!! (வீடியோ)

585

policeஅவுஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்திற்கு வெளியே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய நபரை பொலிசார் மடக்கி பிடித்தனர்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓ பேரல். இவரை சந்திப்பதற்காக போக்குவரத்து நிறுவன ஊழியர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி மார்க் முர்டாக் கூறியதாவது, நியூ சவுத் வேல்சின் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இரண்டு மணி நேரமாக வெள்ளை நிறக் கார் நின்றிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொலிசார் இருவர் காரின் அருகே சென்று குறித்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது,தான் ஓ பேரலை சந்திக்க வந்திருப்பதாகவும், அனுமதிக்கவில்லை என்றால் தீ வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.



மேலும் காரின் உள்ளே சிகரெட் லைட்டரை பற்ற வைத்ததால் புகை சூழ்ந்து கொண்டுள்ளது. உடனே குறித்த நபரை கைது செய்துள்ளனர். இவர் தான் பணிபுரியும் நிறுவனம் குறித்து புகார் செய்வதற்காக வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.