கவிதைப் பூ..

633

ஒரு நாள்
எனது
கிறுக்கள்களை
படித்து முடித்ததும்…

உனக்கு பிடித்த
கவிதை எது என்று
என்னை கேட்டாய்…

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

என் வாழ்க்கை
என்றேன்..

உடனே
கோபமாய்
ஓர் பார்வை பார்த்து
ஒன்றும் புரியாதவளாய்…



நான் கவிதையை
கேட்டேன் என்றாய்…

உன்னால் எழுதப்பட்ட
கவிதை
என் வாழ்க்கைதானே என்றேன்…

உடனே
என்னை பார்க்க
பிடிக்காதவள் போல்
திரும்பி நின்று
வெட்கப் பூ பூத்தாய்…

எனது
வாழ்க்கையில்
இன்னுமொரு
கவிதை பூ பூத்தது…

-இராஜ சேகர்-