மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மீது இடி தாக்கியதால் பரபரப்பு..!

1140

maduraiமதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை இடி தாக்கியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் எழில்வாய்ந்த ஒன்று. மதுரையின் எந்த திசையில் இருந்து பார்த்தாலும், ஓங்கி உயர்ந்து காணப்படும் அதன் அழகு, கம்பீரம் மிக்கது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்த சூழ்நிலையில் மதுரையில் வியாழக்கிழமை மாலை முதல் மழை பெய்து வந்தது. அப்போது ஏற்பட்ட மின்னலின்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரத்தின் உச்சியை தாக்கியது. இதில் கோபுர கலசங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதபோதிலும், சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜகோபுரத்தில் மின்னல் தாக்கியுள்ளதால் விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.