பாகிஸ்தானைச் சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சம்..!

865

pakஇஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தொந்தரவுகள் மற்றும் இடையூறுகள் காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த 600 கத்தோலிக்கர்கள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக சிலாபம் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில்,

இவர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அத்துடன் இந்த மக்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 600 கத்தோலிக்க மக்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் இடையூறுகள் காரணமாகவே இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.



மூன்றாவது நாடு ஒன்றுக்கு செல்லும் நோக்கத்தில் இவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். அடிப்படைவாதிகள் எங்கும் உள்ளனர் என்றார்.