சூரியன் விழுகின்ற கடலினில்..

647

சூரியன் விழுகின்ற கடலினில்
என்னை நனைய விடு..!

விரிகின்ற வெளிகளில் தனிமையின்…
கவிதையை படிக்க விடு..!

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மழை பொழிகின்ற வேளையினில்
மரங்களின்… வேர்களாய் மகிழ விடு..!

ஒளிர்கின்ற மெழுகினில் உன் பிரிதலின்…
வலியினை கருக விடு..!



அலைமோதும் ஓசையினில் உரிமையாய்…
எனதன்பினை எடுத்து விடு..!

தினம் விடிகின்ற பொழுதினில்
உன் விழித்திரை விம்பமதில்
எனை விழுத்தி விடு..!

-மித்யா கானவி-