மன்டேலாவின் இறுதிச் சடங்கிற்காக ஒபாமா தென்னாபிரிக்கா பயணம்..!

557

obamaதென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டேலா ஜோகனஸ்பர்கில் உள்ள வீட்டில் தனது 95வது வயதில் மரணம் அடைந்தார்.

அவரது உடல் இராணுவ மரியாதையுடன், தேசியக் கோடி போர்த்தப்பட்டு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நெல்சன் மண்டேலாவின் உடல் வரும் 15-ம் திகதி கிழக்கு கேப் மாகாணத்தில், அவரது சொந்த ஊரான கினு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்படும். பின்னர் அங்கேயே உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரது மறைவுக்கு ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 8-ம் திகதி தென்னாபிரிக்க மக்களுக்கு தேசிய பிரார்த்தனை நாள் ஆகும்.



10-ம் திகதி ஜோகனஸ்பர்க் கால்பந்து மைதானத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஒரு இலட்சம் பேர் வரை பங்கேற்க முடியும்.

11-ம் திகதி முதல் அடக்கம் செய்யப்படும்ம் வரையில் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடங்களில் அவரது உடல்வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கத்தில் பங்கேற்க மனைவி மிச்சேல் உடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு பயணமாவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.