யாசூசி அகாஷி நாளை இலங்கை வருகிறார்..!

734

yasoorshiஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதியான யாசூசி அகாஷி நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை வரும் அகாஷி போரின் புன்னதான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரச அதிகாரிகள், எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு விஜயம் செய்து வரும் யசூசி அகாஷியின் இந்த இலங்கை விஜயம் அவரது 23 வது விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.



நாளை இலங்கை வரும் அகாஷி 13 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.