சிலாபம் – முன்னேஸ்வரம் பகுதியில் பஸ் மோதி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
குருநாகலில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பஸ்ஸில் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் பெண் ஒருவர் மோதுண்டுள்ளார்.
அந்த சமயத்தில் பஸ்ஸின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடையை அழுத்தியபோது பஸ்ஸுக்குள் இருந்த பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்து பஸ்ஸின் சில்லுக்குள் அகப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் இரண்டு பெண்களும் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மைக்குளம – அலம்ப பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண்ணும் முன்னேஸ்வரம் ஐயநாயக்க பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தை அடுத்து பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.