பிரித்தானியாவில் பிடிபட்ட, கார் திருடனுக்கு “வாழ்நாள் முழுவதும், கார்களைத் தொடக்கூடாது´ என்ற, வித்தியாசமான தண்டனையை, அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும், ஜோஷாவா ரஷ்டன், என்ற 18 வயது இளைஞரை, காரை திருட முயன்றதாக, அப்பகுதி பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, “வாழ்நாள் முழுவதும் கார்களைத் தொடக் கூடாது. பிற, கார் உரிமையாளர்களின் அனுமதியின்றி, கார்களை தொடவோ, ஏறி அமரவோ கூடாது´ என, உத்தரவிட்டார்.