நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் இருந்து 105,000 ரூபா பெறுமதியான செப்புக்கம்பிகளை திருடிச் சென்ற அதன் ஊழியர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த நபர் பிடிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பியபோது குறித்த நபர் செப்புக்கம்பிகளை திருடிச் சென்ற போது பிடிக்கப்பட்டதாக நுரைச்சோலை அனல்மின் நிலைய பாதுகாப்பு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபருடன் வந்த மேலும் இருவர் தப்பிச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட செப்புக்கம்பிகள் நுரைச்சோலை அனல்மின் நிலைய பொலிஸ் சோதனைச்சாவடியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 29 வயதுடைய சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.