மலையால திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகும் விஜய்?

457

vijayதலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அதனால் தமிழைப் போலவே கேரளாவிலும் அப்படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இதுவரை நேரடியாக மலையாளப்படங்களில் நடிக்காத விஜய்யை தற்போது மம்மூட்டி நடிக்கும் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாட வைக்கும் முயற்சி நடக்கிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மலையாளத்தில் 22 பீமேல் கோட்டையம் என்ற படத்தை இயக்கிய ஆஷிக் அபு, தற்போது மம்மூட்டியை நாயகனாக கொண்டு கேங்ஸ்டர் என்றொரு படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ்நாட்டிலும் அப்படத்தை வெளியிட்டு தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த அவர், யாரேனும் முன்னணி தமிழ் நாயகன் ஒருவரை பாடல் காட்சியில் நடிக்க வைத்தால், தனது படத்தை தமிழ்நாட்டிலும் ஓட வைத்து விடலாம் என்று மம்மூட்டியுடன் கலந்து பேசினாராம்.



அப்போது, விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவர் நடித்தால் இரண்டு மொழிக்குமே பலமாக இருக்கும் என்று அவர் ஐடியா கொடுத்தாராம். அதையடுத்து, விஜய் வட்டாரத்தை அணுகும் முயற்சியில ஈடுபட்டுள்ளாராம் ஆஷிக்அபு.

ஏற்கனவே பிரபுதேவா ஹிந்தியில் இயக்கிய ரவுடி ரத்தோர் படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஒரு பாடல் காட்சியில் சிறிது நேரம் விஜய் நடனமாடியிருக்கிறார் என்பதால், இந்த மலையாள படத்தில் மம்மூட்டியுடன் நடனமாட அவர் சம்மதிக்கலாம் என்றே தெரிகிறது.