ஹொங்கொங், நெதர்லாந்து அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தெரிவு..!

492

t20அடுத்தாண்டு பங்களாதேஷில் இடம்பெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றவுள்ள 6 அணிகள் தெரிவாகியுள்ளன. 16 அணிகள் கொண்ட இத்தொடரில் 10 அணிகள் ஏற்கனவே தெரிவாகியிருந்த நிலையிலேயே 6 அணிகள் தற்போது தெரிவாகியுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் தகுதிகாண் போட்டிகளின் முடிவாக இந்த அணிகள் தெரிவாகியுள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தகுதிகாண் போட்டிகளில் நேற்று ஹொங் கொங், நெதர்லாந்து அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்குத் தெரிவாகின. ஏற்கனவே அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் உலக டுவென்டி டுவென்டி தொடருக்காகத் தெரிவாகியிருந்தன.

இவ்வணிகள் தகுதிகாண் முடிவில் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு உலக டுவென்டி டுவென்டி தொடரில் குழு நிலைப் போட்டிகளில் பங்குபற்றும்.



பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அடங்கிய குழு ´1´உடன் இவ்வணிகளில் ஓர் அணியும், இங்கிலாந்து, நியூசிலாந்து,
தென்னாபிரிக்காக, இலங்கை அணிகள் அடங்கிய குழு ´2´ உடன் மற்றோர் அணியும் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும்.