சுற்றுலா விசாவில் இலங்கை வந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய பெண் ஒருவர் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
துணி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த பெண் நேற்று களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது அந்த பெண்ணை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.