பெரிய கல்லாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: வாலிபர் பலி..!

507

accidentகளுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் பெரிய கல்லாறு பகுதியில், இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி வேலி கம்பம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய, உதயபுரம் – பெரிய கல்லாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஜெயச்சந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார்.



இதேவேளை மோட்டார் சைக்கிளின் பின்னாள் இருந்து பயணித்தவர் கல்முனை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.