இலங்கை உள்விவகாரங்களில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கமும், அந்நாட்டு மக்களும் உள்விவகாரப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளக் கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்டவர்கள் என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் நிலைமைகளை மோசமடையச் செய்யும் என தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் உரிமைகளுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மனித உரிமை விவகாரங்களை உலக நாடுகள் அணுக வேண்டுமென சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இரட்டை நிலைப்பாட்டுடனோ தலையீடு செய்வதனை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளது.
மனித உரிமை விவகாரத்தை ஒர் கருவியாகப் பயன்படுத்தி நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் இதனை வரவேற்க வேண்டுமெனவும் சீனா தெரிவித்துள்ளது.