இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் நேற்று இரவு திடீரென்று பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.
பூமிக்கு அடியில் 47 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சி, ரிக்டர் அளவில் 5.1 புள்ளியாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த பூமி அதிர்ச்சியினால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றி உடனடியாக தகவல் எதுவும் இல்லை.