கிரிக்கெட்டின் சகாப்தமான டெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்.
மும்பையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு அவர் கடந்த 16–ம் திகதி கண்ணீருடன் விடை பெற்றார்.
பின்னர் டெண்டுல்கர் குடும்பத்தினருடன் தனது பொழுதை போக்க முடிவு செய்தார்.
அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலை வாஸ்தலமான முசோரிக்கு மனைவி அஞ்சலி, உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர் சஞ்சய் நரங் ஆகியோருடன் சென்றார்.
அங்குள்ள லால்டிபா, லண்டுரா பகுதியில் தங்கினார். அங்குள்ள அவரது இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கவில்லை. ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். மேலும் இரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதித்தார்.
ஒரு வாரம் வரை விடுமுறையை நன்றாக கழித்த டெண்டுல்கர் நேற்று மாலை 3 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு மும்பை திரும்பினார்.
இந்தநிலையில் டெண்டுல்கர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. விரைவில் அவர் தனது அடுத்த கட்டமுடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.
அவர் துடுப்பாட்ட ஆலோசகராக செயல்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.