சென்னைக்கு தங்கம் கடத்த முயன்ற சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் கைது..!

444

arrestசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு தங்கம் கடத்த முயன்ற ஒரு சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

53, 38 வயதுடைய பெண்களும் 15 வயது சிறுமியும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

செய்து முடிக்கப்படாத மூன்று சங்கிலிகள் 10 வளையல்கள் என்பவற்றை அணிந்து கொண்ட இவர்கள் சென்னை நோக்கி செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தங்க நகைகளின் பெறுமதி 33 லட்சத்து 80 ஆயிரம் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.



கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதோடு நகைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.