கவிஞர் ஜெயபாலன் வவுனியா மாங்குளத்தில் வைத்து கைது..!

521

jeyabalanதென்னிந்திய திரைபட நடிகரும், ஈழத்து கவிஞர் மற்றும் சமூக சிந்தனையாளரான ஜெயபாலன் இன்று வவுனியா – மாங்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் சென்று குடியேறியவராவார். தற்போது சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மாங்குளத்திலுள்ள தனது தாயாரின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோதே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்ப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் வீசா நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



தமிழகத்தின் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி தேசிய விருது பெற்ற “ஆடுகளம்“ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் விருதும் பெற்றிருந்தார்.