புதுக்குடியிருப்பு – மாணிக்கபுரம் – விஸ்வமடு பகுதியில், பனை மரம் விழுந்ததில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் அந்தப் பகுதியில் நபரொருவர் பனைமரம் வெட்டிக்கொண்டிருந்தவேளை, குறித்த பெண் அருகில் இருந்த வீதியால் பயணித்துள்ளார்.
இதன்போது வெட்டப்பட்ட பனை மரம் அவர் மேல் விழுந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 56 வயதான அந்தோனி அம்மா என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பனைமரம் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.