சத்யராஜுடன் நடிக்கும் பரத்..!

421

sathyarajதமிழில் நடிகர் பரத் கடைசியாக நடித்து வெளிவந்த படம் ‘555’. இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டு வைத்த நடிகர் பரத்துக்கு, அது இந்தி படவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

தற்போது இந்தியில் ‘ஜாக்பாட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சன்னி லியோன், நஸ்ருதின் ஷா ஆகியோருடன் பாண்டிச்சேரி இளைஞனாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தவிர மலையாளத்தில் ‘கூதாரா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய ஆர்.செந்தில்குமார் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் பரத் நடிக்கிறார். இது பரத்துக்கு 25-வது படமாகும்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவர் நடிக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.