பிரிட்டிஷ் அழகியுடன் விஜய்..!

429

vijayஜில்லா படத்தில் பிரிட்டிஷ் அழகியுடன் சேர்ந்து குத்தாட்டம் போடவுள்ளாராம் விஜய்.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் விஜய்யின் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மலையாள சூப்பர் ஸ்டார், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசிகட்டமாக விஜய்யும் – பிரிட்டிஷ் மொடல் ஸ்கேர்லட் வில்சனும் இணைந்து ஆட்டம் போடும் பாடல் ஒன்றை படமாக்குகிறார்கள்.



டான்ஸில் பட்டையைக் கிளப்பும் விஜய்யும், அவருக்கு இணையாக ஆடும் திறமை பெற்ற ஸ்கேர்லட்டும் இணைந்து ஆடவிருக்கும் இப்பாடல் ரசிகர்களை திரையரங்குகளில் எழுந்து நின்று ஆட வைக்கும் என்கிறது ‘ஜில்லா’ டீம்.

ஏற்கனவே தெலுங்கில் யவடு, கமெராமேன் கங்காதோ ராம்பாபு, இந்தியில் ஷாங்காய் போன்ற படங்களில் ஆடி புகழந்தடைந்தவர் ஸ்கேர்லட் வில்சன்.