ஓயாமல் அழுத குழந்தையை இணையத்தில் ஏலம் விட்ட தாய்..!

418

olxஇந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த தொலைக்காட்சி சேனலை பார்த்தாலும் ´தேவை இல்லாத பொருளா…? ´ஓ.எல்.எக்ஸ்´ மே பேச்தோ..! என்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்தபடியே உள்ளன.

இதே விளம்பரம் பிரேசில் நாட்டிலும் வெளியானதன் விளைவாக பெற்ற மகனை 430 டாலருக்கு புகழ்பெற்ற ஏல வலைதளமான ஓ.எல்.எக்ஸ்-ல் ஏலம் விட்ட தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்த ஆண் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு, ´இவன் கொஞ்சம் கூட நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுக்கொண்டே இருப்பதால் என் தூக்கம் கெட்டுப் போகிறது. நான் வேலை செய்தால் தான் உயிர் வாழ முடியும். எனவே இவனை விற்றுவிட தீர்மானித்துள்ளேன்´ என்று அந்த பாசக்கார தாய் விளம்பரப்படுத்தியுள்ளாள்.

இந்த விளம்பரத்தை பார்த்த போலீசாரும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் அந்த பெண்ணை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்.



இந்த விளம்பரம் தொடர்பாக கருத்து கூறிய ஓ.எல்.எக்ஸ். இணையதளம் விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கம் இடையே உள்ள வர்த்தக பரிமாற்றங்களில் நாங்கள் தலையிடுவதில்லை என ஒதுங்கிக் கொண்டது.

எனினும், தங்கள் இணையதளத்தின் கட்டுபாடுகளை மீறிய வகையில் அமைந்துள்ளதால் அந்த விளம்பரத்தை நீக்கி விட்டதாகவும் அறிவித்துள்ளது.