இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அவர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் வாசிக்கப்பட்டவை:
வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமான 7000 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. துணி இறக்குமதியை 6 வீதத்தால் அதிகரிக்க யோசனை மற்றும் கட்டுமான கைத்தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக தற்போது உள்ளது.
வெளிநாட்டவர்கள் காணி கொள்வனவு செய்வதை முற்று முழுதாக நிறுத்த சட்டம் கொண்டுவரப்படும் என்பதுடன் வங்கிகளை நாங்கள் தனியார் மயப்படுத்தமாட்டோம்.
தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு அதனூடாக அந்த நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டு அந்த வருமானம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அத்துடன் அரசாங்க தொழிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டளவில் 3.6 வீதமாக குறைக்கப்படும். அத்துடன் அரச கடன் கொடுத்தலும் குறைக்கப்படும்.
நிவாரணத்தை வழக்கும் அரசாங்கம் என்றவகையில் வாகனங்கள், மதுபானங்கள் மற்றம் சிகரெட் ஆகியவற்றின் மீதான வரிகள் ஊடாக வருமானத்தை ஈட்டவேண்டியுள்ளது.
அத்துடன் தேசத்தை கட்டியெழுப்பும் வரி வங்கிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 8வது வரவு -செலவுத்திட்டமே இன்று நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
- நாம் மாகாண சபை தேர்தலை நடத்தி இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
- பொதுநலவாய மாநாட்டின் வெற்றி வெளிநாடுகள் நமக்குக் கொடுத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
- மகிந்த சிந்தனை மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது.
- நாம் மாகாண சபை தேர்தலை நடத்தி இலங்கையில் ஜனநாயகம் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம்.
- எங்களுடைய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாகும்.
- கிராமிய மட்டத்தில் தொழில்புரியும் அரச உத்தியோகத்தர்கள் சிரமத்தின் மத்தியில் முன்னேற்றத்துக்காக உழைக்கிறார்கள்.
- அரச வங்கிகளை ஒருபோதும் தனியார் மயப்படுத்த மாட்டேன்.
- நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நீர்வழங்கல் திட்டங்களுக்காக 300 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
- நாட்டை மீட்பதற்கும் மீள்குடியேற்றம்இ மீள்குடியேறிய மக்களின் புனர்வாழ்வுக்கும் அரச வருமானம் செலவிடப்பட்டது.
- பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கும் மீள்குடியேற்றத்துக்கும் மீள்குடியேறிய மக்களின் புனர்வாழ்வுக்கும் அரச வருமானம் செலவிடப்பட்டது.
- மதுபானம், சிகரட் மீதான அரச வரி வருமானம் குறைவடைந்துள்ளது.
- வடக்கு கிழக்கில் பின்தங்கிய பிரதேசங்களில் நீர்வழங்கல், மின்சாரம் உள்ளிட்ட தேவைகளுக்கு 14 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
- ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியுள்ளோம்.
- 25 வீதமாக உள்ள தொலைத்தொடர்பு வரியில் மாற்றம் ஏற்படுத்தப்படாது.
- கடந்த காலங்களில் சுனாமி மற்றும் யுத்தம் ஆகியவற்றின்போது வெளிநாடுகள் நமக்கு பெரும் உதவி செய்துள்ளன.
- 1557 சதுர கிலோ மீற்றர் நிலப்பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது.
63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியத்திட்டம். - 8 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு தொழில் முயற்சி உதவி.
- 2014 ஆம் ஆண்டு முதல் விவசாய ஓய்வூதிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும். இதற்காக அரசாங்கம் 1000 மில்லியன் ரூபாவை முதலாக வழங்குகின்றது.
- வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் மற்றும் மின்சார நடவடிக்கைகளுக்கு 1400 மில்லியன் ரூபா.
- மீன் உற்பத்தியை அதிகரிப்பதனூடாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
மிருக வைத்தியர்களுக்காக 7500 மாதாந்த கொடுப்பனவு. - சிறுதேயிலை செய்கையை ஊக்குவிக்க வருடாந்தம் ஏக்கருக்கு 5000 ரூபா வழங்கப்படும்.
- அனைத்து கிராம சேவை பிரிவுகளிலும் சிறந்த 5 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.
- உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்க 20 ஆயிரம் மாடுகள் இறக்குமதி செய்யப்படும்.
- அனைத்து மாவட்டங்களுக்கு போஷாக்கு தொடர்பான ஆலோசனைகளுக்காக வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படுவர்.
- பின்தங்கிய பிரதேச போக்குவரத்து சேவைக்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு 250,000 ரூபா வரையிலான கடன் வசதி.
2014 ஆம் ஆண்டில் பின்தங்கிய பகுதிகளில் 1000 பாலங்கள் அமைக்கப்படும். - அங்கவீனமுற்றோரின் நலன் கருதி அவர்களுடைய சுயதிறன் வளர்ச்சி நிலையங்களுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு.
- கமநெகும மற்றும் கிராமபுற அபிவிருத்திகளுக்காக 4500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- யாழ்ப்பாணம், கண்டி, அனுராதபுரம், பதுளை, காலி ஆகிய பகுதி வைத்தியசாலைகளில் நவீன வைத்திய உபகரணங்களுடன் கூடிய வசதிகள் வழங்கப்படும்.
கொழும்பு, களுபோவில, ராகம தேசிய வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவை விருத்தி செய்வதற்கு சீனா 180 டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. - இலங்கை ஜனநாயக நாடு என்பதற்கு வடக்கு தேர்தல் சான்று : ஜனாதிபதி
- இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதற்கு அண்மையில் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தல் சான்று வழங்கியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
- நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து முன்னர் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
- வடக்கு மாகாண உட்பட மூன்று மாகாண மக்கள் இந்த வருடத்தில் தமது சொந்த பிரதிநிதிகளை செய்ய முடிந்தது.
கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தலைவர்களின் சிலர் இலங்கை மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு மாறானது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.