மிரிஹாகான பொதுச் சந்தைக்கு அருகில் ரயிலில் மோதி இனந்தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்க 5.2 அடி உயரமுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அடையாளம் காண்பதற்காக சடலம் மிரிகான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மிரிஹான பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.