மக்களுக்கு நிவாரணங்கள் தேவையென்றால் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமென்றால் அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இன்று நாட்டின் பெரும்பாலானவர்கள் புதிய ஆரம்பமொன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திறைசேரியின் சாவிக்கொத்து இந்தப் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவ்வாறு சாவி கொத்து கிடைத்தால் மக்களின் வாயையும் வயிற்றையும் நிரப்ப முடியும்.
அண்மையில் பிரிட்டன் இளவரசர் அரச மாளிகையொன்றில் கேக் வெட்டினார். அவர் கேக் வெட்டியதற்காக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.
எனவே மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.