புதிய அதிவேக வீதியில் தனியார் பஸ்: கேள்விப் பத்திரம் கோரல் இடைநிறுத்தம்..!

457

colகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் கேள்விப் பத்திரம் கோரல் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் சேவையில் ஈடுபட இபோச பஸ்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எனவே தனியார் பஸ் உரிமையாளர்களும் அனுமதி கோரியுள்ளனர்.

அதன்படி, கேள்விப் பத்திரம் விடுத்து அனுமதி அளிக்க தனியார் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்தது.



எனினும் பல தரப்பில் இருந்தும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக கேள்விப் பத்திரம் கோரலை இடைநிறுத்தியுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை 37 கேள்விப் பத்திரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.