இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைப்படி மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சூதாட்ட நிலைய முற்றுகையில் ஈடுபட்ட எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் இடமாற்றப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சூதாட்ட நிலைய முற்றுகையிட்ட பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.