சீன எல்லையில் முதற் முறையாக 50,000 அதிரடிப் படை வீரர்களை களமிறக்கிய இந்தியா..!

590

indiaசீன எல்லையில் சுமார் ரூ.65 ஆயிரம் கோடி செலவில் கூடுதலாக 50,000 வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இராணுவத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடக்கத்தில் 17 பட்டாலியன்களை அமைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய பிறகு அவற்றை மேற்கு வங்கு மாநிலம் பனாகர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சீனாவை ஒட்டி ஆதிக்க எல்லை கோட்டுப் பகுதியில் அதிரடிப் படை வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது இதுவே முதல்முறையாகும்.

இந்தப் படை அனுமதிக்கான உத்தரவுக் கடிதம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுவிட்டதாகவும், இதற்கான நிதி ஒதுக்கீட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



புதிய படைக்கு அதிகாரிகளை நியமிக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. எல்லையில் படைகளை அதிகரிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கடந்த ஜுலை 17ஆம் திகதி அனுமதி வழங்கியது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய படையினர் வடகிழக்குப் பகுதி மற்றும் அருணாச்சல பிரதேச படைப்பிரிவுகளுடன் பிகார், அசாமில் புதிதாக உதயமாக உள்ள இரு மண்டலங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் இந்திய விமானப் படையினரும் பனாகரில் நவீன ரக பீரங்கிகளுடன் படைகளை நிலைநிறுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு ராணுவம் இது தொடர்பாக சமர்பித்த திட்ட அறிக்கையை முப்படைகளும் இணைந்து பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளுமாறு கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.