மயிர்கூச்செறியும் மலைப்பாம்பு மசாஜ்!!(படங்கள்)

771

ஆசிய நாடுகளில் சுற்றுலா தலங்களில் உடலுக்கு உற்சாகம் அளிப்பதற்காக பல வகையான மசாஜ்கள் செய்யப்படுகின்றன. அருவிகள், கடற்கரைகள் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மையங்களில் எண்ணை தடவி மசாஜ் அளிப்பது, மண் குளியல் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ் அளிக்கின்றனர்.

பெண்கள் தம்மை அழகு படுத்த நத்தை மசாஜ்களை செய்வதையும் நாமறிந்தோம். ஆனால் இப்போது இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் சற்று வித்தியாசமாக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மலைப்பாம்பு மசாஜ் செய்கின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உடலில் மலைப்பாம்புகளை தவழ விட்டு, ஒரு பெண் ஒருவர் இதமாக உடலின் பாகங்களை அழுத்துவதன் மூலமாக உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதாக அந்த நிலையம் கூறுகிறது.

தற்போது இந்த மசாஜூக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பும் பெருகியுள்ளது.ஏராளமானோர் மலைப் பாம்பு மசாஜ் செய்வதற்காக இங்கு குவிகின்றனர். இதற்காக வாடிக்கையாளர்களிடம் 3000 கட்டணம் வசூலிக்கின்றனர்.



1

2

3

4

5

6