கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு இன்றையதினம் தினம் வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் விஷேட வழிபாடுகள் இடம்பெற்றன . ஆலயம் முழுவதும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளித்தது.
விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து திருவீதியுலாவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
(படங்கள் – ஜெயராஜா)