வவுனியாவில் பலரிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர் வவுனியா பொலிசாரால் விசாரணை..!

694

arrestவவுனியாவில் பலரிடம் பண மோசடி செய்த நபர் ஒருவர் வவுனியா பொலிசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்

இது பற்றி மேலும் தெரியவருவதாவது வவுனியாவில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த மக்களிடம் வங்கி கடன் வேலை வாய்ப்பு மற்றும் வாகனம் எடுத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கான பணத்தினை வாங்கி ஏமாற்றியுள்ளார் வவுனியாவில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கி தருவதாக கூறி போலியான விண்ணப்பங்களை கொடுத்து பல தொகை பணம் வாங்கியுள்ளார் குறித்த நபரை பாதிக்கப்பட்ட மக்கள் தேடி அலைந்துள்ளனர் அவரால் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்து காணப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தலைமறைவாகியிருந்த நபரை பிடித்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் வவுனியா (வயது 37) உக்குளாங்குளத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிட தக்கதாகும்.