மாப்பிள்ளை என்னை விட உயரமாக இருக்க வேண்டும் – அனுஷ்கா..!

418

anuசுடிதார் குதிரை அனுஷ்காவுக்கு 31 வயதாகி விட்டது. இதனால் அவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இதற்கு இதுவரை எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்து வந்த அனுஷ்கா சமீபத்தில் இதுகுறித்து வாய் திறந்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவர் கூறுகையில் இந்த மீடியாக்காரர்கள் எனக்கு எத்தனை முறை தான் திருமணம் செய்து வைப்பார்களோ தெரியவில்லை.

ஆனாலும் நான் இப்போது கல்யாணத்துக்கு தயாராகி விட்டேன். எனக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கிறேன்.



கிடைத்தால் உடனடியாக திருமணம் தான் என்கிறார். உங்களை விட உயரமான மாப்பிள்ளை தேடுவதால் தான் திருமணம் தாமதமாகிறது என பேச்சு அடிபடுகிறதே என கேட்டால் லக லகவென சந்திரமுகி மாதிரி சிரித்து மழுப்புகிறார்.

ஆர்யாவை பற்றி கேட்டபோது அவர் நல்ல மனிதர். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையேயான இதைத் தவிர வேறு எந்த விஷயமும் இல்லை என்கிறார்.