மனவேதனை அடைந்த சச்சின் ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை..!

438

India v West Indies 2nd Test Day 3கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் மனவேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (வயது 20).

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான இவர், கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இவர், கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின் இறுதிநாள் எனக் கூறி புலம்பி வந்துள்ளார்.



இந்நிலையில்,நேற்று சச்சின் ஓய்வு பெற்றதை தாங்க முடியாத விஜய்,தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இது குறித்து பொலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.