ரஜினி, அஜித்துடன் கமலும் இணைந்தார்: அப்படியாயின் விஜய்?

440

kamalஜனவரி 26ம் திகதி கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வௌியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜித் குமாரின் வீரம் ஆகிய படங்கள் வௌியாகின்றன.

கோச்சடையான் வௌியாவதால் பொங்கலுக்கு பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி வௌியிடவுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கமல் படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்தை போன்று இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் முக்கிய நடிகர்களின் படங்களாக வௌியாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.



கோச்சடையான் மட்டும் 700 திரையரங்குகளில் வௌியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யார் படத்திற்கும் பாதிப்பில்லாமல் படங்களை வெளியிட ஆலோசனை நடந்து வருகிறதாம்.