அமெரிக்க போர் கப்பலில் மோதிய ஆளில்லா உளவு விமானம்..!

540

usaஅமெரிக்க கடற்படை வீரர்கள் சுமார் 300 பேர் தெற்கு கலிபோர்னியா கடற்பகுதியில் நேற்று போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ´சான்சலர்வில்லி´ என்ற போர் கப்பலில் இருந்து ஆளில்லா உளவு விமானங்களை ஏவி ஒத்திகை பார்த்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கப்பலில் இருந்து சீறி புறப்பட்ட ஒரு ஆளில்லா உளவு விமானம் இயந்திர கோளாறினால் திசை திரும்பி போர் கப்பலை தாக்கியது.

எதிர்பாராத இச்செயலினால் கடற்படையினர் அதிர்ச்சி அடைந்தனர். கப்பலில் இருந்த 2 வீரர்களுக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், கப்பலுக்கோ, இதர வீரர்களுக்கோ பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் கடற்படை செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.