கிரான்பாஸ், சிறிமாவோ பண்டாரநாயக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இகுருகடை சந்தியில் இருந்து ஆமர்வீதி நோக்கி பயணித்த லொரி ஒன்று முதியவர் மீது மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பல்லேகம, தெல்தோட்டை பகுதியைச் சேர்ந்த, 72 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விபத்துடன் தொடர்புடைய லொரி சாரதி கைதுசெய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.