40 பைக்கற் ஹெரோயினுடன் இருவர் கைது..!

1288

arrestமுச்சக்கர வண்டியில் 40 பைக்கற் ஹெரோயின் கடத்திய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஸ்கம பொலிஸ் பிரிவில் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில் புதிய அம்பலம் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து 2 கிராம் 945 மில்லிகிராம் நிறையுடைய தலா 15, 25 பைக்கற் ஹெரோயின்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று  அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.



கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.