இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது 68ம் பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார்.
இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மத வழிபாட்டு நிகழ்வுகள், உணவு விநியோகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1945ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி ஜனாதிபதி பிறந்தார்.
1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் வெற்றியீட்டி முதல் முறையாக நாடாளுமன்றிற்கு தெரிவானார்.