அரசாங்கத்தினால் சமாதானத்தை வென்றெடுக்க முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
போர் வென்றெடுக்கப்பட்டமை பாராட்டப்பட வேண்டியதாகும், ஐக்கிய தேசியக் கட்சி இதனை ஏற்றுக்கொள்ள தயங்கப்போவதில்லை. எனினும், அரசாங்கம் இதுவரையில் சமாதானத்தை வென்றெடுக்கவில்லை.
கட்சிகள் என்ற ரீதியில் பிளவடைந்து செயற்பட்டாலும், தாய் நாடு என்ற விவகாரத்தில் ஒன்றிணைந்தே செயற்பட வேண்டும்.
இலங்கை என்பது ஒரே நாடாகும். இங்கு எவருக்கும் தனியான பூர்வீக பூமிகள் கிடையாது. வடக்கு என்பது தனியான நாடல்ல.
கோடிக்கணக்கான பணம் செலவிட்டு பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு கொழும்பில் நடத்தப்பட்ட நேரத்தில், வடக்கு மக்கள் தங்களது குறைகளை கூறி பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருனின் காலடியில் விழுகின்றனர்.
இந்த நிலைமை வெட்க்கேடானது.
எமது நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு பிரிட்டன் பிரதமரினால் தீர்வு வழங்க முடியுமா? இந்த அரசாங்கம் ஏன் மக்களை இவ்வாறான ஓர் சூழ்நிலைக்கு தள்ளியது.
அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களை கவனிப்பதில்லை என்ற செய்தி உலகம் முழுவதிலும் பரவியுள்ளது.
மக்கள் தங்களது பிரச்சினைகளை இந்த நாட்டு ஜனாதிபதியிடமே சொல்ல வேண்டும்.
நேர்மையாக நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஓர் அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளக் கூடிய ஓர் தலைவரையை நாம் நியமிக்க வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.