இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு சென்றார்.
ஜோகாவில் உள்ள வணிகவியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
பின்னர், இங்கிலாந்து தூதரக அதிகாரிகளுடன் வர்தான் பஜார் பகுதி வழியாக சென்ற டேவிட் கமரூனின் பார்வையை தெருவோர வண்டி கடை ஒன்றின் பெயர் பலகை கவர்ந்தது.
‘விக்டோரியா’ (இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி) என்ற பெயர் கொண்ட அந்த வண்டி கடைக்கு சென்ற அவர் 2 வடைகளை வாங்கி சாப்பிட்டார்.
பின்னர், கடைக்காரரிடம் எவ்வளவு பணம் தர வேண்டும் ? என்று கேட்ட டேவிட் கமரூன் 30 ரூபாயை தந்துவிட்டு எவ்வித பந்தாவும் இன்றி நடந்து சென்றார்.