இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாமை, முழுமையான-சுதந்திரமான விசாரணையை பிரிட்டன் பிரதமர் கோரியுள்ளமை, இலங்கை ஜனாதிபதி உயிர்வாழும் உரிமையை பாதுகாத்திருப்பதாகக் கூறியுள்ளமை போன்ற விடயங்கள் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் பதில்கள் அளித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ளாமையை புறக்கணிப்பாகக் கொள்ளக்கூடாது என்று சல்மான் குர்ஷித் கூறினார்.
இலங்கையில் போர் முடிந்த பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி இந்தியா அறிந்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
அனுபவங்களைப் பெறப் பெற இலங்கை முன்னேற்றத்தைக் காட்டும் என்று சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.