விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் திடீரெ வீட்டுக்கு வந்ததால் வீட்டார், உறவினர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று கடவத்த பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத் தகவல்படி மேலும் தெரியவருவதாவது,
கடவத்த பொலிஸ் பிரிவில் கடந்த 8ம் திகதி அதிகாலை வயோதிபப் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அன்றைய தினம் பகல் குறித்த பெண்ணின் பிள்ளைகள் எனக் கூறிக் கொண்டு வந்தவர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
அதன் பின் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நிறைவில் சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ராகம பட்டுவத்த பிரதேசத்தில் உள்ள வீட்டில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பெண்ணுக்கும் 7ம் நாள் சடங்கு இடம்பெற்றது. அதன்போது தானமும் வழங்கப்பட்டது.
இதனிடையே உயிரிழந்ததாகக் கூறப்படும் பெண் இன்று காலை திடீரென வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
இதனைக் கண்ட பிள்ளைகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த பிள்ளைகள் தங்கள் தாயை தவறாக அடையாளம் காட்டியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.