இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு யானைக் கூட்டத்தின் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.
மேலும் பல யானைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் இருந்து 55 கி.மீ துரத்தில் இருக்கும் சல்சா வனப்பகுதி வழியாக நேற்று மாலை 5.45 மணிக்கு அசாமின் திப்ருகருக்கு விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது சுமார் 40 யானைகளை கொண்ட கூட்டம் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த யானைகளை ரயில் மோதியதில் 6 யானைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயின. பல யானைகளுக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று நிறுத்தப்பட்ட ரயிலில் இருந்த பயணிகளை மீட்டு அலிப்பூர்தாரில் இருந்த வந்த ரயிலில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
வனத்துறையினர், மருத்துவர்களோடு விரைந்து காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.