பொங்கலுக்கு முன் ஜில்லாவை வெளியிட திட்டம்..!

388

jillaதீபாவளிக்கு முன் அ‌‌ஜித்தின் ஆரம்பம் வெளியானது போல் விஜய்யின் ‌ஜில்லாவும் பொங்கலுக்கு முன்பே திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஜில்லாவின் டாக்கி போர்ஷன் ஏறக்குறைய முடிந்துவிட்டது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார் நேசன்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

செங்கல்பட்டில் விஜய்யின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இது படத்தில் வரும் அவ‌ரின் அறிமுக சண்டைக் காட்சி என படக்குழு தெ‌ரிவித்துள்ளது.

பொங்கலுக்கு ‌ஜில்லா வெளியாவது உறுதி. பொங்கல் 15ம் திகதி புதன்கிழமை வருகிறது. அதனால் படத்தை 10ம் திகதி வெள்ளிக்கிழமையே வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.



அதனால் தயா‌ரிப்பாளருக்கு இரண்டு மடங்கு இலாபம்.வெள்ளிக்கிழமை படம் வெளியானால் செவ்வாய்வரை ஹவுஸ்ஃபுல்லாகதான் ஓடும். புதனிலிருந்து பொங்கல் விடுமுறை.

ஓபனிங் அளவுக்கு கூட்டம் அம்மும். ஆரம்பம் படமும் இரண்டு தினங்கள் முன்னதாக வெளியானதால் பிரமாண்ட ஓபனிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.