கோச்சடையான் ஜனவரி 10–ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

414

kochadayanரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10–ந் திகதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந் திகதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படங்களுடன் கோச்சடையானும் மோதுகிறது.