சமந்தாவின் அன்பான அட்வைஸ் – கடுப்பில் சித்தார்த்..!

418

samanthaசமந்தாவின் அன்பான அட்வைஸ் கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளாராம் சித்தார்த்.

சித்தார்த், சமந்தா இருவரும் காதலர்கள், திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று கொலிவுட், டோலிவுட் உலகில் பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஆனால் இவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடி போட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆனால் இருவரும் காதல் தொடர்பான மீடியாவின் கேள்விகளுக்கு பதில் தரவில்லை.



வெளிப்படையாக காதலை தெரிவித்தால் பட வாய்ப்புகள் வராது என்று காதல் விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசுவதை நிறுத்திக்கொண்டார் சமந்தா.

ஆனால் சித்தார்த்துடன் இணைய தளம் மூலம் காதலை வளர்த்து வருகிறாராம்.

சமந்தாவுக்கு, சித்தார்த் பாபி என்று செல்லப் பெயர் வைத்திருக்கிறார். இணைய தளத்திலும் இப்படித்தான் அவரை குறிப்பிடுகிறாராம்.

சமீபத்தில் சித்தார்த்திடம் இணையதளத்தில் கருத்து பரிமாறிக்கொண்ட சமந்தா,உடல் நலனை நன்கு கவனித்துக்கொள்ளவும், சரியான நேரத்துக்கு மருந்து மாத்திரை உட்கொள்ளவும் என்று பரிவுடன் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் இது சித்தார்த்துக்கு கடுப்பை ஏற்றி உள்ளதாம், காரணம் டுவிட்டரில் சமந்தாவின் அறிவுரையை படித்த திரையுலகினர் சிலர்,சித்தார்த்துக்கு போன் செய்து உடல் நலம் விசாரிக்கிறார்களாம். உடம்புக்கு என்ன ஆச்சு,எதுக்கு மருந்து சாப்பிடுறீங்க? என கேட்கிறார்களாம்.

இதனால் சமந்தா மீது கோபமாக உள்ளாராம் சித்தார்த்.