கேன்ஸ் விழாவில் கோச்சடையான் டிரைலர் வெளியாகாதது ஏன்?

616

 

இளைய மகள் சவுந்தர்யாவின் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள முதல் 3டி படம் கோச்சடையான்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

Kochadaiyaan

இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா, ருக்மணி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.



ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடி்ப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்த‌ின் டிரைலரை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக ரஜினி உள்ளிட்ட கோச்சடையான் படக்குழுவினர் கேன்ஸ் பட விழாவுக்கு செல்லவிருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.

ரஜினியின் உடல்நிலை சரியில்லாததால் கேன்ஸ் பட விழாவை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் இதனை படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் மறுத்துள்ளதுடன், டிரைலர் ரிலீஸ் ஆகாததற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறிகையில், கோச்சடையான் படத்தின் டிரைலரை பார்த்த ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் உள்ளிட்டவர்கள் டிரைலரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்யலாம் என்று கூறினார்கள்.

அவசர ‌கோலத்தில் சரியாக செய்யாமல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக, அற்புதமாக செய்யலாம் என்று ரஜினி கூறியதால் கடைசி நேரத்தில் கேன்ஸ் படவிழாவை ரத்து செய்துவிட்டோம்.

இன்னும் சில தினங்களில் கோச்சடையான் படத்தின் மெருகூட்டப்பட்ட டிரைலர் வெளியாகிவிடும்.

கேன்ஸ் தவிர இன்னும் எத்தனையோ சர்வதேச பட விழாக்கள் இருக்கின்றன. அதில் டிரைலரை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.