மாத்தளையில் உள்ள நிறுவனம் ஒன்றின் விடுதியில் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலுக்கும்புர பகுதியைச் சேர்ந்த கிருஷாந்த் குமாரதுங்க என்பரே நேற்று பகல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மரண விசாரணை, பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காதல் தொடர்பால் ஏற்பட்ட மனக்கஷ்டத்தில் குறித்த நபர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.